கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படம் குறித்த அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எவனென்று நினைத்தாய் என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் கூறியிருந்தார்கள். மேலும் இந்த படத்தில் புதிய டெக்னாலஜி ஒன்றை கமல் பயன்படுத்தவுள்ளதாகவும் செய்தி வந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது கமல் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை குறைந்த கால அளவில் முடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறாராம். இதற்கு முன்னர் கமல் நடிப்பில் தூங்காவனம் திரைப்படம் 35 முதல் 40 நாட்களுக்குள் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த திரைப்படத்தைப் போலவே இதன் படப்பிடிப்பையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் இந்த திரைப்படம் விரைவில் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Share.