“அனிதா பேசின பேச்சுக்கு செய்ய வேண்டிய விஷயம் இதுதான்”… கமல் பேசும் ‘பிக் பாஸ் 4’ ப்ரோமோ!
October 31, 2020 / 05:39 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.
தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் ஷோவில் ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் கமல் “மங்களகரமாக ஆரம்பிக்கணும் சுமங்கலி மேட்டருக்கு வருவோம்” என்று சொல்கிறார். பின், அர்ச்சனா “அந்த இடத்துல அது அப்போ தேவையில்லாம இருந்திருக்கலாம்” என்று கமலிடம் சொல்கிறார்.
அதன் பிறகு ஷிவானி நாராயணன் “correct-ன்னு தோணுது. அது எந்த இடத்துல பேசுனாங்களோ அந்த இடமும் correct” என்று கமலிடம் சொல்கிறார். ஷிவானியை தொடர்ந்து அனிதா சம்பத் “இப்பையும் அதை மாத்திக்க மாட்டேன் சார். நான் correct-ஆ பேசுனதா தான் இந்த டைம்ல நான் நினைக்குறேன். ஏன்னா இது நிறையா பேருக்கு போய் சேர வேண்டிய விஷயம்னு நான் நம்புறேன்” என்று கமலிடம் சொல்கிறார். அதற்கு கமல் “நீங்க பேசின பேச்சுக்கு செய்ய வேண்டிய விஷயம் ஒரு கையில செய்ய முடியாது, ரெண்டு கையில செய்யணும்” என்று கைத்தட்டுகிறார் மேலும் “எங்கதான் பேசுறது அப்ப, எப்ப பேசுறது?” என்று கேட்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.