மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி… அவருக்காக கமல்ஹாசன் போட்ட ட்வீட்!
October 30, 2021 / 11:42 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
இந்த ஆண்டு (2021) ஏப்ரல் 1-ஆம் தேதி இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன் தினம் (அக்டோபர் 28-ஆம் தேதி) இரவு திடீரென ரஜினி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் வந்ததும் அவரது ரசிகர்கள் பதறி விட்டனர்.
அதன் பிறகு நேற்று (அக்டோபர் 29-ஆம் தேதி) மதியம் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் “நேற்று இரவு தலை சுற்றல் காரணமாக திரு.ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை அளித்து சரி செய்யப்பட்டிருக்கிறது.
இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் திரு.ரஜினி” என்று கூறப்பட்டிருந்தது. தற்போது, இது தொடர்பாக நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் ட்விட்டரில் “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் @rajinikanth விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.