கோவையில் சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய கமல்… தீயாய் பரவும் வீடியோ!

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது. நேற்று (மார்ச் 15-ஆம் தேதி) நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கோவை தெற்கு பகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதற்கு முன்பாக கமல்ஹாசன் அவரது அண்ணன் சாருஹாசனின் மனைவியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இன்று (மார்ச் 16-ஆம் தேதி) காலை கோவையில் உள்ள சின்னப்பா தேவர் ஹாலிற்கு சென்ற கமல் ஹாசன் அங்கு சிலம்பம் சுற்றியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

Share.