டி. ராஜேந்திரை சந்தித்த கமல்!!

80-களில் தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைசாலியாக டி ராஜேந்தர், தற்போது உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதால் வயிற்றுப்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதற்காக மேல் சிகிச்சைக்கு சிங்கப்பூருக்கு செல்வதாக இருந்த நிலையில், தற்போது இன்று அமெரிக்காவிற்கு செல்ல இருக்கும் டி ராஜேந்தரை, உலகநாயகன் கமலஹாசன் நேரில் சந்தித்து அவருடைய உடல் நலத்தை குறித்து விசாரித்து இருக்கிறார். அப்போது டி ராஜேந்தர், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் டி ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் ஆகியோர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

இதில் டி ராஜேந்தர் ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிட திடகாத்திரமாக இருப்பதால், அவர் அமெரிக்கா சென்று வெகு சீக்கிரமே இந்தியா திரும்புவார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ஜூன் மூன்றாம் தேதி ரிலீசான விக்ரம் படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் படுஜோராக கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிஸியாக இருக்கும் கமல், டி ராஜேந்தரை நேரில் வந்து உடல் நலத்தை விசாரித்து சிம்பு மற்றும் அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் அளித்திருக்கிறார்.

Share.