முதல்வரை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்!

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. மல்டி ஸ்டாரர் படமாக இந்த படம் உருவாகி உள்ளதால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்த படம் வசுல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை நடிகர் கமலின் படத்திற்கு கிடைக்காத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் பிரமாண்டமான வெற்றிக்கு திரை நட்சத்திரங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். தற்போது நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். அங்கு நடிகர் கமல்ஹாசனும் முதல்வர் ஸ்டாலினும்
எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Share.