ரசிகர்களுடன் படம் பார்க்க போகும் கமல் !

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் ,காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்‌.

மேலும் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். நாளை தக்ஷஇந்த படம் திரைக்கு வர இருக்கிறது.
நடிகர் கமல் இந்த படத்தை விளம்பரபடுத்தும் வகையில் கொச்சி, டில்லி , மலேசியா என தொடர்ந்து பயணம் செய்து வருகிறார். இதனால் உலகம் முழுக்க இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


நான்கு வருடம் கழித்து கமல் படம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் விஜய் சேதுபதி வில்லனாக மெரட்ட இருக்கிறார். அனிருத் இசையில் கமல் நடித்து இருக்கும் முதல் படம் இது தான். பல முக்கிய அம்சங்களுடன் தரமாக இந்த படம் அமைந்துள்ளது என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் இருக்கிறது.

 

இந்நிலையில் நடிகர் கமல் மற்றும் படக்குழுவினர் நாளை படத்தை ரசிகர்களுடன் இணைந்து அதிகாலை காட்சி பார்க்க உள்ளார்கள் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் கமல் மற்றும் படக்குழுவினர் படம் பார்க்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Share.