தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய்சேதுபதியை இயக்குகிறாரா கமல்…!
May 7, 2020 / 06:00 PM IST
|Follow Us
இன்ஸ்டா லைவில் வந்த கமல் ஹாஸன் தன்னிடம் பல கேள்விகள் கேட்ட விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசினார். விஜய் சேதுபதியோ கமலுடன் சேர்ந்து பணியாற்றி அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக கூறினார். இந்நிலையில் கமல்ஹாசன் இயக்கி நடிக்கவிருந்த தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் அந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவுள்ளதாகவும் கூறப்பட்டுகிறது.
மேலும் படத்தை கமல் இயக்காமல் மாறாக வேறு ஒருவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 விபத்து, தொடர் அரசியல் பணி காரணமாக கமல் அனைத்தில் இருந்தும் விலகுவதாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக லைகாவுடனான மோதல் போக்கே இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் தான் இன்ஸ்டா லைவ் நிகழ்ச்சிக்கு தலைவன் இருக்கின்றான் என்று தான் பெயரிடப்பட்டது என்றும் விஜய் சேதுபதி அதில் நடிக்க இருப்பதை மறைமுகமாக பதிவு செய்ய நினைத்தே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக இருக்கும் விஜய் சேதுபதி கடந்த சில நாட்களாக நாத்தீக கருத்துகளை அதிகமாக போதிக்க ஆரம்பித்துள்ளதால், திராவிடர் கழகம், கமல்ஹாசன் ஆகியோருக்கு நெருக்கமானவராக ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.