நடிகர் கமல்ஹாசன் சென்னையில் புத்தக விற்பனை நிலையத்தை துவங்கி வைத்தார் . இந்த புத்தக விற்பனை நிலையதின் உரிமையாளர் இயக்குநர் பா.ரஞ்சித் . இந்த நிகழ்ச்சியில் கமல் பேசியதாவது ” அரசியலையும் , கலாச்சாரத்தையும் , தனித்தனியாக வைத்திருக்கக் கூடிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் .
நாம் உருவாக்கியது தான் அரசியல் . ஆள்பவர்கள் என்ற வார்த்தையே இருக்கக்கூடாது என நினைக்கிறேன் . ‘ நாம் நியமித்தவர்கள் அவர்கள் ‘ என்ற எண்ணம் மக்களுக்கு வரும்போது ஜனநாயகம் நீடுழி வாழும் . ஒவ்வொருவரும் தன்னளவில் தலைவன் என்று நினைக்கும் பட்சத்தில் இந்திய உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக மாறும் .
என்னுடைய முக்கியமான அரசியல் எதிரி என்பது சாதி . 21 வயதிலிருந்தே நான் இதனை சொல்லிக் கொண்டு இருக்கிறேன் . தற்போது அதனை பலமான வார்த்தைகளில் சொல்லும் பக்குவம் எனக்கு வந்து இருக்கிறது . சாதியை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதை அனைவரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் . ஆனால் இன்னும் நடந்தபாடில்லை என்று பேசி இருந்தார் கமல் .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus