“போட்ட சண்டைக்கு பதில் சொல்லியாகனும்ல”… கமல் பேசும் ‘பிக் பாஸ் 4’ ப்ரோமோ!
November 7, 2020 / 07:35 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.
தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு பிக் பாஸ் ஷோவில் ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டார். மேலும், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் போட்டியாளர்களிடம் “இப்ப எந்த மூடுல இருக்கீங்க? சண்டை மூடுலையா? சமாதான மூடுலையா?” என்று கேட்கிறார்.
பின், சனம் ஷெட்டியிடம் கமல் “போட்ட சண்டைக்கு பதில் சொல்லியாகனும்ல சனம்?” என்று கேட்கிறார். அதற்கு சனம் ஷெட்டி “விட்றலாம் சார் வேண்டாம்” என்று கமலிடம் சொல்கிறார். அதன் பிறகு கமல் “நிறையா சண்டை இருக்கு. ஒரு order-ஆ போலாம்” என்று சொல்கிறார். அதற்கு பாலாஜி சிரித்ததும் கமல் “அப்படியே அந்த சிரிப்பை கொஞ்சம் off பண்ணிடுங்க. திட்டுனீங்க இல்லையா? நியாபகம் இருக்கா வார்த்தை என்னனு? இந்த நேரம் எல்லாத்துக்குமே நியாகம் இருக்கும். anything else. ஒண்ணுமே சொல்லாம இருந்துட்டீங்க. சிரிப்பை தான குறைச்சுக்க சொன்னேன். பேச்சை குறைச்சுக்க சொல்லலையே பாலாஜி” என்று சொல்கிறார். பின், பாலாஜி கமலிடம் “sorry சார்” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.