‘பிக் பாஸ் 4’ ஷோவில் தனது பிறந்த நாளை கொண்டாடிய கமல்… வெளியானது புது ப்ரோமோ!
November 7, 2020 / 04:46 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.
தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு பிக் பாஸ் ஷோவில் ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டார். மேலும், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.
இந்த ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் குரலில் “இந்த இனிய நாளன்று உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி” என்று ஒலிக்க, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் செம ஸ்டைலிஷாக நடந்து வருகிறார். அவரிடம் பிக் பாஸ் “ஹேப்பி பர்த்டே கமல் சார்” என்று சொல்ல, அதற்கு கமல் “ஓ. thank you” என்று சொல்கிறார். பின், அவரிடம் “கமல் சார் ட்ரீட் எங்க?” என்று பிக் பாஸ் கேட்க, அதற்கு கமல் “ட்ரீட்டா i treat everyone equally and respectfully and expect the same, that’s your treat. thank you” என்று சொல்கிறார். அதன் பிறகு போட்டியாளர்கள் அனைவரும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்கிறார்கள். அதற்கு கமல் “அடிக்கடி i love you, love you-ன்னு சொன்னீங்க. i love you all” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.