அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… கமலின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
September 15, 2021 / 06:06 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்போது, சீசன் 5-க்கான ‘பிக் பாஸ்’ வீட்டின் செட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சியின் மூன்று ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியை வருகிற அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து ஆரம்பிக்க விஜய் டிவி ப்ளான் போட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் கமல் ஹாசனுக்கு இந்த சீசனை தொகுத்து வழங்க ஒரு நாளைக்கு ரூ.4 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 15 நாட்கள் மட்டுமே கமல் கால்ஷீட் கொடுத்திருப்பதால், அவருக்கு மொத்தமாக ரூ.60 கோடி சம்பளம் கொடுக்கப்படுமாம்.