ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக கமல்… கசிந்தது ‘விக்ரம்’ படத்தின் கதை!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’, இயக்குநர் மகேஷ் நாராயணன் படம், இயக்குநர் வெற்றிமாறன் படம், இயக்குநர் பா.இரஞ்சித் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன், காளிதாஸ் ஜெயராம், ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர்.

டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட First Glanc படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் கதை லீக்காகியுள்ளது.

இதில் ஒரு முக்கிய சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கும் நரேனை விஜய் சேதுபதியும் (அண்ணன்), அவரது தம்பி ஃபஹத் ஃபாசிலும் கொலை செய்ய முயற்சி செய்கிறார்களாம். இவர்களிடம் இருந்து நரேனை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான கமல் எப்படி காப்பாற்றினார்? என்பதே இதன் கதையாம்.

 

Share.