நாளை ரிலீஸாகும் கமலின் ‘விக்ரம்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் ரிப்போர்ட்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’யில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

மேலும், கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்துள்ளார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி,படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. படத்தை நாளை (ஜூன் 3-ஆம் தேதி) ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் ரிப்போர்ட் இதோ..

படத்தின் தயாரிப்பு செலவு – ரூ.150 கோடி
தமிழ்நாடு வெளியீட்டு உரிமை (ரெட் ஜெயன்ட் மூவீஸ்) – ரூ.35 கோடி
சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் (டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் – தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்) – ரூ.98 கோடி
தெலுங்கு டப்பிங் வெளியீட்டு உரிமை (சுதாகர் ரெட்டி) – ரூ.6 கோடி
கேரளா வெளியீட்டு உரிமை (ஷிபு தமீன்ஸ்) – ரூ.5.50 கோடி
கர்நாடகா வெளியீட்டு உரிமை (கற்பக விநாயகா பிலிம்ஸ்) – ரூ.4.25 கோடி
ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் (கோல்ட்மைன்ஸ்) – ரூ.35 கோடி
வடஇந்திய தியேட்டரிக்கல் ரைட்ஸ் – ரூ.2 கோடி
வெளிநாட்டு வெளியீட்டு உரிமை (சஞ்சய் வாத்வா) – ரூ.16 கோடி
ஆடியோ ரைட்ஸ் (சோனி நிறுவனம்) – ரூ.3 கோடி
மொத்த பிசினஸ் – ரூ.204.75 கோடி

Share.