அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாரா கீர்த்தி சுரேஷ்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கும் என்று ஏற்கனவே செய்தி வெளியானது. அதன் பின்னர் இந்த திரைப்படத்தின் வேலைகள் தொடங்கி விட்டதாகவும் ரஜினிகாந்த் வருகிற நவம்பர் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து இந்த படத்தின் பஞ்ச் டயலாக்குகளை ரஜினிகாந்த் எழுதியதாகவும் செய்தி வெளியானது. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தான் ஹைதராபாத் ஏர்போர்ட்டில் வந்து இறங்கி இருக்கிறார் என்று தகவல் வந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு முறைப் பெண்ணாக குஷ்பு மற்றும் மீனா நடிக்கிறார்கள். மேலும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ரஜினிக்கு தங்கை வேடத்தில் நடிக்கிறார்.மேலும் இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.