நடிகை கீர்த்தி சுரேஷின் காதலர் இவரா?… விரைவில் திருமணமாமே!
February 13, 2021 / 01:09 PM IST
|Follow Us
பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். தமிழில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமான படம் ‘இது என்ன மாயம்’ தான் என்றாலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய இரண்டு படங்களும் தான்.
அதன் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், பெண்குயின் ‘ என படங்கள் குவிந்தது. கீர்த்தி சுரேஷ் நேரடி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘அண்ணாத்த, மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம், குட் லக் சகி, ரங் தே, சாணிக் காயிதம், சர்காரு வாரி பாட்டா, வாஷி’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணம் தொடர்பான ஒரு தகவல் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்தும், கீர்த்தி சுரேஷும் காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள ப்ளான் போட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு (2020) அனிருத்தின் பர்த்டேவை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடன் நெருக்கமாக இருக்கும் சில ஸ்டில்ஸையும் கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அந்த ஸ்டில்ஸ் தான் இப்போது தீயாய் பரவும் இச்செய்திக்கு காரணம். தற்போது, இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பில் விசாரித்தபோது “பரவி வரும் இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளனர்.