அடுத்த கட்டத்திற்கு சென்ற ‘கே.ஜி.எஃப் 2’… கொண்டாட்டத்தில் யாஷ் ரசிகர்கள்!

‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக யாஷ் நடிக்கிறாராம். மேலும், முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன் ஆகியோர் நடிக்கிறார்கள். ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடிக்கிறார்.

இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே, 90 % ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாம். இன்னும் 25 நாட்களின் ஷூட்டிங் மட்டுமே பேலன்ஸாம். இதற்காக பெங்களூரில் உள்ள மினர்வா மில்ஸில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளதாம். தற்போது, இந்த ஷெடியூலுக்கான ஷூட்டிங்கை இன்று (ஆகஸ்ட் 26-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Share.