என் வாழ்க்கையை மாற்றிய மனிதர் – ஸ்ரீநிதி

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான படம் ‘கேஜிஎப் ‘ .இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தவர் நடிகை ஸ்ரீநிதி . “கேஜிஎப் 1 ” மற்றும் “கேஜிஎப் 2 ” ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளது.

நடிகை ஸ்ரீநிதி துளு மொழியை தனது தாய் மொழியாய் கொண்டவர் . பெங்களூருவில் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார். 2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திவா சுப்ராநேஷனல் அழகிப் பட்டத்தையும், அதன்பின் மிஸ் சுப்ராநேஷனல் 2016 அழகிப் பட்டத்தையும் வென்றுள்ளார். அதன் பிறகு தான்‌ கேஜிஎப் 1 மற்றும் கேஜிஎப் 02 ஆகிய படங்களில் நடித்து முடித்தார்‌.இந்நிலையில் தற்போது ” கோப்ரா ” படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீலைப்பற்றி நடிகை ஸ்ரீநிதி ஒரு பதிவை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில் உங்கள் சொந்த முடிவுகள், உங்கள் வாழ்க்கையை மாற்றி, கனவுகளை அடைய உதவும் போது, சில சமயங்களில் வேறொருவரின் முடிவும் மிக அரிதாக அதைச் செய்யலாம். பிரசாந்த் என்னைத் தேர்ந்தெடுத்தார், என் வாழ்க்கை என்றென்றும் மாறிவிட்டது, அனைத்திற்கும் நன்றி பிரசாந்த்,” என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Share.