சினிமாவில் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர்கள் ஒரு ரகம் என்றால், பிரபலங்களின் உறவினர்கள் என்பதால் சுலபமாக சினிமாத்துறைக்குள் வந்தவர்கள் மற்றொரு ரகம். உள்ளே நுழைந்தது மட்டும் தான் சிபாரிசில் மற்றபடி அவர்களும் கஷ்டப்பட்டு தான் முன்னுக்கு வந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர்.
இந்த ரகத்தில் உள்ள சில பிரபலங்களையும் அவர்களது உறவினர் பிரபலங்களையும் தற்போது பார்க்கலாம்.
கமல்ஹாசன் – மணிரத்னம்
கமல்ஹாசனின் அண்ணனின் மருமகன் தான் மணிரத்னம். அதனால் கமல்ஹாசனுக்கும் மணிரத்னம் மருமகன் முறைதான்.
சோ – ரம்யா கிருஷ்ணன்
ராஜ மாதா ரம்யா கிருஷ்ணனுக்கு முன்னாள் நகைச்சுவை நடிகரும், பின்னாள் அரசியல் ஞானியுமான சோ.ராமசாமி மாமா முறையாவார்.
ஏஆர்ரஹ்மான் – ஜிவிபிரகாஷ்
முன்னணி இசையமைப்பாளரான ஜிவிபிரகாஷ், ஏஆர்ரஹ்மானின் அக்கா மகன் ஆவார். ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்குபுக்கு ரயிலு பாடலை பாடியதும் இவர்தான்.
வெங்கட்பிரபு – யுவன்ஷங்கர் ராஜா
இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவும், கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபுவும் அண்ணன் தம்பி. இதில் வெங்கட்பிரபு மூத்தவர்.
பிரியாமணி – வித்யாபாலன்
முத்தழகு பிரியாமணியின் தந்தையும், வித்யாபாலனின் தந்தையும் சகோதர்கள். இதனால் தான் வித்யா பாலனின் மூலமாகவே FamilyMan வெப்சீரிஸில் பிரியாமணிக்கு சான்ஸ் கிடைத்தது.
ரஜினி – அனிருத் – தனுஷ்
ரஜினியின் மனைவி லதாவின் அண்ணன் மகன் தான் அனிருத். ரஜினிக்கும் தனுஷுக்கும் என்ன உறவு என்பது ஊருக்கே தெரியும்.
வித்யூலேகா – செல்வராகவன்
நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் வித்யூலேகாவும், செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியும் சகோதரிகள். இவர்களின் தந்தை மோகன் ராமும் பிரபலமான நடிகர்தான்.
டேனியல் பாலாஜி – முரளி
பிரபல நடிகர் முரளியின் உறவினரான டேனியல் பாலாஜி, இதுவரை யாரிடமும் தான் முரளியின் உறவினர் என்று கூறியதில்லை.