அஜித்தை பாராட்டிய நடிகை லட்சுமிமேனன்- வைரலாகும் கமெண்ட்!
September 21, 2020 / 12:24 PM IST
|Follow Us
தமிழ்சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை லட்சுமிமேனன்.
2012ஆம் ஆண்டு வெளிவந்த “சுந்தரபாண்டியன்” மற்றும் “கும்கி” திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த இரண்டு படங்களுமே இவருக்கு வெற்றியைத் தேடித் தந்ததால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க கமிட்டானார் லட்சுமிமேனன்.
குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க என்று தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வெற்றி வாகை சூடி உள்ளார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் 2017 ஆம் ஆண்டு பிரேக் எடுத்து தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். இந்த சமயங்களில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் லட்சுமிமேனன் தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
தற்போது வேதாளம் படத்தில் தன் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட லட்சுமி மேனன் நடிகர் அஜித்தை ஜெண்டில்மேன் என்று பாராட்டி கமெண்ட் செய்துள்ளார். இது அஜித் ரசிகர்களை லக்ஷ்மிமேனன் பக்கம் ஈர்த்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.