லோகேஷை கலாய்த்து வரும் மீம்ஸ்கள்!

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கமல்,சூர்யா , விஜய் சேதுபதி ,ஃ பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது . உலகம் முழுக்க இந்த படம் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது . பல இடங்களில் இந்த படம் புதிய சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் .

படம் வெளியான அன்றே சினிமா பிரபலங்களுக்காக பிரத்யேகக் காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் பலரும் படத்தைப் பார்த்துப் பாராட்டினர். அதில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தியேட்டர்களில் படத்தைப் பார்த்தார்கள்.

இந்நிலையில் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூலை நிகழ்த்தி உள்ளது. நேற்று விக்ரம் படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. அதில் லோகேஷ் மற்றும் கமல் இணைந்து சாப்பிடும் பொழுது எடுத்த புகைப்படம் வடிவேலின் மீம்ஸ் புகைப்படத்துடன் இணைத்து வைரலாகி வருகிறது.

Share.