‘சந்திரமுகி 2’வில் மாஸ் காட்டப்போகும் லாரன்ஸ்… படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா?
December 5, 2020 / 01:40 PM IST
|Follow Us
முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றி அடைந்த படங்களின் லிஸ்டில் கண்டிப்பாக ‘சந்திரமுகி’ படத்துக்கும் ஒரு இடம் உண்டு. 2005-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரபல இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார்.
படத்தில் ‘சந்திரமுகி’ என்ற பவர்ஃபுல்லான டைட்டில் ரோலில் ஜோதிகா நடித்திருந்தார். மேலும், பிரபு, வடிவேலு, நாசர், வினீத், மாளவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஹாரர் ஜானரில் வெளி வந்த இந்த படத்தின் பார்ட் 2-வை இயக்க பி.வாசு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், பிரபல நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிக்கப்போகிறார். இதனை கலாநிதி மாறன் தனது ‘சன் பிக்சர்ஸ்’ மூலம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவிருக்கிறார். தற்போது, இந்த படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி என தகவல் கிடைத்துள்ளது. மேலும், படத்தின் டைட்டிலை முதல் பாகத்தை தயாரித்த பிரபுவின் ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’-யிடம் இருந்து ‘சன் பிக்சர்ஸ்’ ரூ.1 கோடிக்கு கைப்பற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.