லிங்குசாமி – ராம் போதினேனி கூட்டணியில் உருவாகியுள்ள ‘தி வாரியர்’… வெளியானது மாஸான ட்ரெய்லர்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் ‘ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். லிங்குசாமி இயக்கிய கடைசி படமான ‘சண்டக்கோழி 2’ 2018-ஆம் ஆண்டு ரிலீஸானது. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார்.

இயக்குநர் லிங்குசாமி இயக்கியுள்ள புதிய படம் ‘தி வாரியர்’. இந்த படத்தில் டோலிவுட்டில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ராம் போதினேனி நடித்துள்ளார். இப்படம் நடிகர் ராம் போதினேனியின் கேரியரில் 19-வது படமாம்.

இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இதனை ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ராம் போதினேனிக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான ஆதி நடித்துள்ளார்.

இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தை வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இதன் ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.