கைதி 2 பற்றி பேசிய லோகேஷ் !

கார்த்தி நடிப்பில் 2019வது ஆண்டு வெளியான படம் கைதி. இந்த படத்தை இயக்கி இருந்தவர் லோகேஷ் கனகராஜ். எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரித்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆக்ஷன் படமாக உருவாகி இருந்ததால் இளம் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர்.

இந்த படத்திற்கு பிறகு கைதி படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதன் பிறகு லோகேஷ் மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தை எடுத்து முடித்தார்.

விக்ரம் படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. முன்னதாக விக்ரம் படம் வெளியாகுவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருந்தார் இயக்குனர் லோகேஷ் அதில் லோகேஷ் கைதி படத்தை திரும்ப பார்த்துவிட்டு வாருங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

விக்ரம் படத்திற்கு பிறகு கைதி 2 எடுக்க அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய லோகேஷ் கைதி படத்தில் வரும் டில்லி கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். அதில் டில்லி கதாபாத்திரம் ஒரு கபடி விளையாட்டு வீரன் . டில்லி சிறையில் கபடி விளையாட்டு வீரர்.சிறையில் பல கோப்பைகளை வென்றவர். இதை கைதி இரண்டாம் பாகத்தில் காட்டலாம் என்று முதல் பாகத்தில் இதை திரையில் சொல்லவில்லை என்று இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார். இதனால் கைதி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share.