நடிகர் மாதவன் “ராக்கெட்ரி – த நம்பி எஃபெக்ட்” என்ற படத்தை தானே எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இந்த படம் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் “சைலன்ஸ்” என்ற படத்திலும் திலிப் குமார் இயக்கத்தில் “மாறா” என்ற படத்திலும் நடித்து வருகிறார் மாதவன்.
தற்போது மாதவன் நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் மீதமுள்ள வேலைகள் தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருவதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“ராக்கெட்ரி – த நம்பி எஃபெக்ட்” எனும் திரைப்படம் ISROவை சேர்ந்த முன்னாள் இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ள கதையை கொண்டுள்ளதாம். இந்தப் படத்தில் நடிகர் மாதவனோடு சிம்ரன் மற்றும் ரவி ராகவேந்திரன் நடிக்கிறார்கள். நடிகர் சூர்யா இந்தப் படத்தில் ஒரு கேமியோ ரோலில் வருகிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியா, பிரின்ஸ்டன், ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளதாம்.
இன்னும் 15 நாட்கள் பட வேலைகள் மட்டுமே மீதம் உள்ளதாகவும், விரைவில் இந்த வேலைகளும் முடிக்கப்படும் என்றும் தற்போது அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on InstagramAnd back to work after a loooooong time today. Gods grace ..🙏🙏🙏❤️❤️❤️❤️😘😘😘😘
A post shared by R. Madhavan (@actormaddy) on