மாதவன் ஹீரோவாக நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘ராக்கெட்ரி’… வெளியானது மேக்கிங் வீடியோஸ்!
June 19, 2022 / 11:14 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானதுடன் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது. அந்த படம் தான் ‘அலைபாயுதே’. அதன் இயக்குநர் மணிரத்னம். ‘அலைபாயுதே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் மாதவனுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. மாதவன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
இப்போது, மாதவன் ஹீரோவாக நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை வருகிற ஜூலை 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இப்பட்டத்தின் மேக்கிங் வீடியோஸை மாதவன் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார்.