மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’… ஆடியோ ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா பிரபல நிறுவனம்?

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இப்போது மணிரத்னம் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ஐ இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை அதிக பொருட்செலவில் ‘மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம்.

சமீபத்தில், இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யவிருப்பதாகவும், முதல் பாகத்தை (PS – 1) வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

தற்போது, இந்த படத்தின் (முதல் பாகம்) ஆடியோ ரைட்ஸை பிரபல நிறுவனமான ‘டிப்ஸ்’ ரூ.24 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இன்று (ஜூலை 8-ஆம் தேதி) மாலை இப்படத்தின் டீசர் ரிலீஸ் செய்யப்படுமாம்.

Share.