ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ‘சோழா சோழா’ பாடல்!
August 20, 2022 / 10:33 AM IST
|Follow Us
சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இப்போது மணிரத்னம் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ஐ இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை அதிக பொருட்செலவில் ‘மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம்.
சமீபத்தில், இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யவிருப்பதாகவும், முதல் பாகத்தை (PS – 1) வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரையும், ‘பொன்னி நதி’ பாடலையும் ரிலீஸ் செய்தனர். இந்த டீசர் மற்றும் சிங்கிள் டிராக் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, இப்படத்தின் ‘சோழா சோழா’ பாடலை ரிலீஸ் செய்துள்ளனர்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.