மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு தமிழில் 2016ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “அச்சம் என்பது மடமையடா” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகிற்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.
பிரபல ஒளிப்பதிவாளர் விபின் மோகனின் மகளான இவர், தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 2019ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான “தேவராட்டம்” படத்தில் நடித்திருந்தார் மஞ்சிமா மோகன்.
இந்த படத்தில் தனது காலில் சிறிய அடிப்பட்டு ஆபரேஷன் செய்து படத்தில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்து வந்தார். தற்போது முழுமையாக குணமடைந்த மஞ்சிமா மோகன் F.I.R, துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மற்ற ஹீரோயின்கள் போல இவரும் தற்போது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி உள்ளார்.
https://www.instagram.com/p/CFwZZLCpzXC/?igshid=8rw3qzclvsvt
https://www.instagram.com/p/CFwZazdJZGM/?igshid=da38w14h941x
https://www.instagram.com/p/CFwZb04poSB/?igshid=7a3ohsp4tuca
https://www.instagram.com/p/CFwZdwRp8aT/?igshid=115lhwetxhell
https://www.instagram.com/p/CFwZc7DJrqN/?igshid=1vtyxjsp7w84b
https://www.instagram.com/p/CFwZeqhpO02/?igshid=1lg7wi989sz85