Trisha & Mansoor Ali Khan : “நான் த்ரிஷாவிடம் மன்னிப்பே கேட்கவில்லை”… மீண்டும் பரபரப்பை கிளப்பிய மன்சூர் அலிகான்!
November 29, 2023 / 01:08 PM IST
|Follow Us
பிரபல நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடிக்க என்னை அணுகியபோது த்ரிஷாவுடன் பெட்ரூம் காட்சி இருக்கும் என்று நினைத்தேன். அவரை அப்படியே கையில் தூக்கிக் கொண்டு போவேன் என்று எண்ணினேன். நான் எத்தனை படத்துல அதுபோன்ற கற்பழிப்பு காட்சிகளில் நடித்திருக்கிறேன்” என்று பேசியிருந்தார்.
இவர் பேசியதை கேட்டதும் நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் போட்டனர். மேலும், இந்த விஷயம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பின், நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கையில் “நான் சொல்ல வருவது என்னவென்றால்… அடக்க நினைத்தால் அடங்க மறு!!!. இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு!
எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்” என்று கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் “தவறு செய்வது மனிதகுணம், மன்னிப்பது தெய்வகுணம்” என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது, மன்சூர் அலிகான் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “நான் த்ரிஷாவிடம் மன்னிப்பே கேட்கவில்லை. என் P.R.O-விடம் போனில் ‘மரணித்துவிடு’ என்று சொன்னதை ‘மன்னித்துவிடு’ என தவறாக புரிந்து கொண்டார். அந்த நேரத்தில் மீண்டும் இந்த பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் என்று அமைதியாக இருந்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus