‘மாஸ்டர்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!
March 30, 2021 / 09:47 AM IST
|Follow Us
2016-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆந்தாலஜி படம் ‘அவியல்’. இதில் ‘களம்’ என்ற கதையை மட்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அதன் பிறகு லோகேஷ் இயக்கிய படம் ‘மாநகரம்’. ஹைப்பர் லிங்க் படமான இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், லோகேஷுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தினை இயக்கினார். ஆக்ஷன் த்ரில்லர் படமான இது 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இப்படம் ரிலீஸாவதற்கு முன்பே, விஜய்க்கு கதை சொல்லி ‘மாஸ்டர்’ படத்துக்கான வேலைகளை துவங்கி விட்டார். இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ‘மாஸ்டர்’ ரிலீஸானது. இந்த படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்போது கமலை வைத்து இயக்கும் ‘விக்ரம்’ படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக பணியாற்றி வந்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் “எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று கூறியுள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.