நடிகை திரிஷா குறித்து வீடியோ வெளியிட்டுள்ள மீராமிதுன்!
July 28, 2020 / 07:48 PM IST
|Follow Us
சமீபகாலமாக இணையதளத்தில் தனக்குத்தானே பெரிய நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டு சர்ச்சையை கிளப்பி வருபவர் நடிகை மீராமிதுன்.
“பிக்பாஸ்” நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமான நடிகை மீரா மிதுன் ஏதாவது ஒரு சர்ச்சையான பதிவை வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை த்ரிஷா, நயன்தாரா போன்ற பெரிய நட்சத்திர நடிகைகளை சாடி ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிவந்தார். இதை பலவாறு பலரும் கலாய்த்து தள்ளினார்கள்.
அதைத்தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை குறிப்பிட்டு அவர்களின் ஜாதியையும் மதத்தையும் ஒப்பிட்டு பெரிய சர்ச்சையை சமீபத்தில் கிளப்பினார். இதனால் சூப்பர் ஸ்டார் மற்றும் தளபதி ரசிகர்கள் இவர் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
இவர் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது அரசியல் பிரபலங்களையும் வம்புக்கு இழுத்து வந்தார். இப்படி தன்னைத்தானே பெரிய நட்சத்திரமாய் கருதி பெரிய பெரிய பிரபலங்களுடன் தன்னை ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பி வரும் மீரா மிதுன்.
தற்போது மீண்டும் திரிஷாவை குற்றம் சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் மீரா மிதுன் “ஜல்லிக்கட்டு விவகாரம் நடந்தபோது திரிஷா பீட்டா உறுப்பினர் என்பதற்காக அனைவரும் அவரை குற்றம் கூறினீர்கள். ஆனால் தற்போது நான் அவரைப் பற்றி பேசினால் கெட்டவளாக தெரிகிறேன். திரிஷாவிற்கு ஆதரவாக நீங்கள் பேசுகிறீர்கள். பீட்டா உறுப்பினராக நம் தமிழ் கலாச்சாரத்தில் இருக்கும் மாட்டை பற்றி கவலைப்பட்ட திரிஷா, ஆடு கோழிகள் வெட்டப்படுவதை பற்றி என்றைக்காவது கவலைப்பட்டாரா? மேலும் இந்த ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திரிஷா மன்னிப்பு கேட்கவில்லை. அவரது தாய் தான் மன்னிப்பு கேட்டார். நெப்போடிசம் தமிழ் சினிமாவில் ஜாதியிலிருந்து தான் வருகிறது. திரிஷா ஒரு உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் தான் இன்றும் தமிழ் திரையுலகில் நிலைத்து வருகிறார். நான் பெரியார் பற்றி ட்விட் போட்டேன், அதை கூட நீங்கள் அனைவரும் கிண்டல் செய்தீர்கள். அனைவரும் பெரியார் பிறந்த பூமி பெரியார் பிறந்த மண் என்று சும்மா பேசிக்கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் இந்த நேப்போடிசத்துடன் இருக்கும் ஜாதியை ஒழிக்க யாருமே எதுவுமே செய்யவில்லை. இந்த ஜாதியுடன் கூடிய நெப்போடிசம் ஒழிய வேண்டும் என்றால் மீண்டும் பெரியார் பிறந்துதான் வரவேண்டும். இல்லையென்றால் பெரியாரைப் பின்பற்றும் நான் இதை ஒழித்துக் கட்டுவேன்” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.