‘மோனிஷா என் மோனலிசா’ என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவிற்கு டி.ராஜேந்தர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை மும்தாஜ் . ‘மோனிஷா என் மோனலிசா’ படத்தை தொடர்ந்து மலபார் போலீஸ், குஷி, சாக்லேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் மும்தாஜ் .
சிறிது காலம் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்த மும்தாஜ், பிறகு நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு குறைவான வாக்குகளுடன் வெளியேறினார். இவர் தற்போது தீவிர இறைவழிபாட்டில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகை மும்தாஜ் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டு கண்ணீர் மல்க இறைவழிபாடு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது .