நடிகை மும்தாஜ் 1999-வது ஆண்டு வெளியான மோனிஷா என் மோனலிசா என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியிருந்தார் . குஷி , லூட்டி , ஸ்டார் , சாக்லேட் , த்ரீ ரோசஸ் , உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் படங்களில் இவர் முன்னணி நடிகர்களுடன் இயன் இணைந்து நடனமாடி உள்ளார் . 2005ஆம் ஆண்டுக்கு பிறகு இவரின் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கியது . அதன் பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை . அதனை தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியிலும் 2011-ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியிலும் நடன போட்டி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார் .
அதன் பிறகு 2018-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் . இந்த போட்டிக்கு பிறகு இவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் இந்த நிகழ்ச்சியிலும் பெரிதாக ஜெயிக்கவில்லை மற்றும் சினிமா வாய்ப்புகளும் வரவில்லை .
இந்நிலையில் நடிகை மும்தாஜ் தற்போது தன் சகோதரியுடன் அண்ணா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் வேலை செய்த இரண்டு சிறுமிகள் அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதில் அவர்கள் கடந்த ஆறு வருடமாக மும்தாஜின் வீட்டில் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் மும்தாஜ் தங்களை கொடுமை படுத்துவதாகவும், சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று கேட்டால் அனுப்ப மறுப்பதாகவும் அவர்கள் அங்கு இருந்தபடியே போலீசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் புகாரை விசாரிக்க போலீசார் உடனே மும்தாஜின் வீட்டிற்கு விரைந்து சென்று சிறுமிகளை மீட்டுள்ளனர். தற்போது சிறுமிகள் இருவரும் ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது . அந்த காப்பகத்தில் அவர்களுக்கு மன ரீதியாக ஏதும் பாதிப்பு இருக்கிறதா அல்லது உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இது குறித்து நடிகை மும்தாஜிடம் விசாரித்து விரைந்து போலீஸ் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.