ஆபாசமாக கேள்வி கேட்ட ரசிகர்.. பதிலடி கொடுத்த நந்திதா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘அட்டகத்தி’. தினேஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்கியிருந்தார்.

‘அட்டகத்தி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை நந்திதா ஸ்வேதாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி, புலி, உப்பு கருவாடு, அஞ்சல, உள்குத்து, அசுரவதம், தேவி 2, 7, டாணா, ஈஸ்வரன், கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை’ என தமிழ் படங்கள் குவிந்தது.

Nandita's Reply To Fan Who Asked Vulgar Question1

Nandita’s Reply To Fan Who Asked Vulgar Question1

நந்திதா ஸ்வேதா நடித்துள்ள புதிய படமான ‘IPC 376’ மிக விரைவில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், நடிகை நந்திதா ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் அவரிடம் ஆபாசமாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு நந்திதா அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார்.

Share.