1800 குழந்தைகளுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த நயன்தாரா !

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் (இன்று ) ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முன்பாக பத்திரிக்கையாளர்களை அழைத்து, அதிகாரப்பூர்வமாக திருமணம் பற்றிய தகவலை விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தார்.எங்களது திருமணம் வருகிற ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. அன்று மதியம் எனது சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படம் வெளியாகும் என்றும் அவர் அறிவித்து இருந்தார்.

திருமணத்தில் நெருங்கிய நட்பு வட்டம் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்த விக்னேஷ் சிவன், திருமணம் முடிந்த பின்னர் வருகிற ஜுன் 11 ம் தேதி மதியம் நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் அறிவித்து இருந்தார். மேலும் தான் இயக்கிய படங்களுக்கு , தான் தயாரித்த படங்களுக்கு , தான் எழுதிய பாடலுக்கு இப்படி தான் சினிமாவில் செய்த அனைத்திற்கும் பத்திரிகையாளர்களின் ஆதரவு இருந்துள்ளது எனவே உங்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.

இந்நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் இவர்களது திருமண நிகழ்ச்சியை வாங்கியுள்ளது என்றும் இந்த திருமண விழாவை ஆவணப்படமாக கௌதம் வாசுதேவ் மேனன் எடுக்க உள்ளார் என்ற செய்தியும் வெளியாகிய இருக்கிறது .இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்ச்சியை ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் திருமணத்தை முன்னிட்டு 1800 குழந்தைகளுக்கு அன்னதானம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Share.