ஷூட்டிங் ஸ்பாட்டில் நஸ்ரியாவின் கணவரும், நடிகருமான ஃபஹத் ஃபாசிலுக்கு படுகாயம்!

மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஃபஹத் ஃபாசில். இவர் தமிழ் திரையுலகிலும் ‘சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன்’ என இரண்டு படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். மேலும், தமிழில் ‘ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்காஹ்’ போன்ற படங்களில் நடித்த நடிகை நஸ்ரியாவின் கணவர் தான் ஃபஹத் ஃபாசில் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் ‘மாலிக், இருள், தங்கம், ஜோஜி, பாட்டு, மலையன் குஞ்சு, பாச்சுவும் அல்புத விளக்கும்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மலையன் குஞ்சு’ படத்தின் ஷூட்டிங் கொச்சியில் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது.

தற்போது, இப்படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் போது உயரத்தில் இருந்து கீழே விழுந்த நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, ஃபஹத் ஃபாசிலை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், ஒரு வாரம் மட்டும் அவரை ஓய்வில் இருக்கச் சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

Share.