தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… வெளியானது ‘கண்ணுங்களா என் செல்லங்களா’ பாடல் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இவர் நடிப்பில் ‘பொம்மை, இறவாக்காலம், உயர்ந்த மனிதன், மாநாடு, நெஞ்சம் மறப்பதில்லை, டான், கடமையை செய்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸுக்காக எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்கள் பல ஆண்டுகளாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இப்படம் கடந்த மார்ச் 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ஹாரர் ஜானர் படமான இதனை செல்வராகவன் இயக்க, மிக முக்கிய ரோல்களில் ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பாளராகவும், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

தற்போது, இந்த படம் ஜீனியஸ் இயக்குநர் செல்வராகவன் – ஹீரோ எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ‘கண்ணுங்களா என் செல்லங்களா’ பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளார். இப்பாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.