‘நித்தம் ஒரு வானம் ‘ படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் விமர்சனம் !
November 4, 2022 / 12:49 PM IST
|Follow Us
நித்தம் ஒரு வானம் படத்தை புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கி உள்ளார் . இப்படத்தில் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்க, வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
முதலில் இந்த படத்தில் துல்கர் சல்மான் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார் என்றும் கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது என்றும் படத்தை பற்றிய செய்தி ஜனவரி 2017 இல் ஊடகங்களுக்கு முதலில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த “ரொமாண்டிக் என்டர்டெய்னர்- மூவி” என்று இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் அறிவித்தார் . படத்தில் நான்கு முன்னணி நடிகைகள் இருப்பார்கள் என்றும், நிவேதா பெத்துராஜ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோருடன் பாத்திரங்களுக்கான விவாதங்கள் நடைபெற்றதாகவும் கூறினார். அக்ஷரா ஹாசன், நஸ்ரியா நஜிம் மற்றும் பார்வதி உள்ளிட்ட மற்ற நடிகைகளும் படத்திற்காக பரிசீலிக்கப்பட்டனர்.
ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், ஸ்ரீகர் பிரசாத் மற்றும் அறிமுக நடிகர் தீன தயாளன் ஆகியோர் முறையே படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் இசையமைப்பாளராக குழுவில் இணைந்தனர் என்று அறிவிக்கப்பட்டது
ஜூன் 2021 இன் பிற்பகுதியில் இந்த படம் தொடங்கியது . கொரோனா காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆனது . இதனால் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகினார் . துல்கருக்குப் பதிலாக அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முன்னணி பெண் வேடங்களில் நடித்து உள்ளனர் . மேலும் தீன தயாளன் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோருக்குப் பதிலாக இசையமைப்பாளர் கோபி சுந்தர் மற்றும் எடிட்டர் ஆண்டனி ஆகியோரும் படத்தில் பணியாற்றி உள்ளனர் . ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸுக்குப் பதிலாக வித்து அய்யனா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நித்தம் ஒரு வானம் படம் இன்று வெளியாகி உள்ளது படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர் .