படையப்பா நீலாம்பரியாக நடிக்கவிருந்தவர் இந்த நடிகைதானாம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு அனைத்து நட்சத்திர நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.

இவர் சிவாஜிகணேசன் படமான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து பேரும் புகழும் அடைந்தவர்.

அந்த சமயத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் வரும் பிரபல கதாபாத்திரமான நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதன்முதலில் நடிகை மீனாவை தான் அணுகினார்களாம்.

ஆனால் அவருக்கு கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டதால் இந்த வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றுள்ளது. ஆனால் அந்த பட வெற்றிக்கு பின், இந்த வாய்ப்பை நழுவ விட்டதை எண்ணி மீனா இன்றுவரை வருத்தப்படுகிறாராம்.

Share.