1977 ஆம் வருடம் வெளியான “பதினாறு வயதினிலே” படத்தின் மூலம் பாரதிராஜா இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் கிராமம் தழுவிய கதைகளை படமாக்குவதில் வல்லவர்.
இவர் இயக்கத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இன்று வரை வெளியாகியிருக்கும். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் பணிபுரிந்துள்ளார்.
தமிழ் திரையுலகிற்கு இவர் அறிமுகப்படுத்திய நடிகர் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, கடலோர கவிதைகள், கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா ஆகிய திரைப்படங்கள் இன்றுவரை மக்களால் போற்றப்பட்டு வருகிறது.

கடைசியாக இவர் “மீண்டும் ஒரு மரியாதை” என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்திருந்தார். தற்போது தமிழ் சினிமாவின் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒரு சங்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராக இயங்கிவரும் பாரதிராஜா அவ்வப்போது தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது பாரதிராஜா போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இவரது ஸ்டைலான இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
