கமலின் ‘விக்ரம்’ படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் நடிக்கவிருந்த ரோல் எது தெரியுமா?
September 11, 2022 / 06:15 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ இந்த ஆண்டு (2022) ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, செம்பன் வினோத் ஜோஸ் இருவரும் வில்லன் ரோல்களில் நடித்திருந்தார்கள். மேலும், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, ஜாஃபர் சாதிக், ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர்.
கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்திருந்தார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், இந்த படத்தில் செம்பன் வினோத் ஜோஸ் ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென லோகேஷ் கனகராஜின் முதல் சாய்ஸாக இருந்தது இயக்குநர் கெளதம் மேனன் என தகவல் கிடைத்துள்ளது. பின், சில காரணங்களால் இயக்குநர் கெளதம் மேனனால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.