‘பிக் பாஸ் 4’ டைட்டில் வின்னரான ஆரியின் ‘பகவான்’… ஹீரோயின் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். இப்போது நடிகர் ஆரி நடிப்பில் ‘அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், பகவான்’ மற்றும் இயக்குநர் அபின் இயக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி நடிக்கும் புதிய படமான ‘பகவான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. இயக்குநர் காளிங்கன் இயக்கும் இப்படத்திற்கு பிரசான் பாலா இசையமைத்து கொண்டிருக்கிறார். தற்போது, இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடா நடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை நடிகர் ஆரியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுடன், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)

Share.