தொழிலதிபரின் மகனுடன் டேட்டிங்.. அப்போ, அந்த இயக்குநருக்கு டாட்டா காட்டிவிட்டாரா இளம் நடிகை?
March 6, 2021 / 09:52 PM IST
|Follow Us
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதல் நடிகரின் படத்தில் ஹீரோயினாக நடித்தார் இந்த இளம் நடிகை. அதன் பிறகு தெலுங்கில் சில படங்களில் நடித்த இவர், தமிழ் திரையுலகிலும் என்ட்ரியாக ஆசைப்பட்டார். தமிழில் அறிமுகமான முதல் படமே துப்பறியும் படம் தான். இந்த படம் ஹிட்டாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்னொரு தமிழ் படத்தில் நடித்தார். டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டி வரும் நடிகர் தான் இதில் ஹீரோவாக நடித்தார்.
சமீபத்தில், 23 வயதான இந்த இளம் நடிகை 40 வயதான இயக்குநரை காதலித்து வருவதாகவும், அவருடன் டேட்டிங் சென்று வருவதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் தண்டோரா போடப்பட்டது. தமிழில் வயது வித்தியாசத்தை குறிப்பிட்டு டைட்டில் வைக்கப்பட்ட படத்தை இயக்கியது இந்த இயக்குநர் தானாம். இந்த இயக்குநர் கடைசியாக இயக்கிய தெலுங்கு படத்தில் நம்ம இளம் நடிகையும் நடித்திருக்கிறார்.
அப்போது இருவருக்கும் இடையே இருந்த நட்பு, பின் காதலாக மாறியிருக்கிறது. இந்த இயக்குநரின் அப்பா டாப் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி உண்மையா? பொய்யா? என்று தெரிவதற்குள் அந்த இளம் நடிகையை பற்றி இன்னொரு செய்தி பரவி வருகிறது. பிரபல தொழிலதிபரின் மகனுடன் இந்த நடிகை டேட்டிங் சென்று வருகிறாராம்.