கமல் – லோகேஷ் காம்போவில் ஆரம்பமாகவிருந்த ‘விக்ரம்’… திடீரென படத்தின் டெக்னீஷியன் மாற்றம்!
May 18, 2021 / 05:11 PM IST
|Follow Us
விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘விக்ரம்’ படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட ‘விக்ரம்’ டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் முக்கிய ரோலிலும், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பவர்ஃபுல்லான வில்லன் ரோலிலும் நடிக்க உள்ளனர்.
முதலில் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய சத்யன் சூர்யன் ஒப்பந்தமானார். தற்போது, சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு பதிலாக பிரபல ஒளிப்பதிவாளர் கிரீஸ் கங்காதரன் கமிட்டாகி உள்ளாராம். பல மலையாள படங்களில் பணியாற்றிய கிரீஸ், ஏற்கனவே தமிழில் விஜய்யின் ‘சர்கார்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.