தன்னை விட வயதில் சிறியவரை திருமணம் செய்து கொண்ட பிரபல பின்னணி பாடகி!

சினிமாவில் பிரபல பின்னணி பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா சுந்தர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் ஃபேமஸானவர். அதன் பிறகு மாளவிகா சுந்தருக்கு அடித்தது ஜாக்பாட். திரைப்படங்களில் பாடல் பாடும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது.

தமிழ் மொழியில் ‘டங் டங்’ (படம் : மனம் கொத்திப் பார்வை), ‘ஜில்லா கேடி’ (படம் : ஜாக்பாட்), ‘கும் ஸாரே’ (படம் : கடவுள் இருக்கான் குமாரு), ‘சொக்கி போறாண்டி’ (படம் : முப்பரிமாணம்), ‘கண்ணும் கண்ணும் ப்ளஸ்’ (படம் : 100% காதல்), ‘LED கண்ணால’ (படம் : பென்சில்) போன்ற பல பாடல்களை மாளவிகா சுந்தர் பாடியுள்ளார். மாளவிகா சுந்தர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் பல பாடல்களை பாடி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்திருக்கிறார்.

சமீபத்தில், அஷ்வின் காஷ்யப் ரகுராமன் என்பவரை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்ததுடன், அவருக்கு லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு ஸ்டில்லையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் மாளவிகா சுந்தர். இவர்களின் திருமணம் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

தற்போது, 33 வயதான பாடகி மாளவிகா சுந்தர் திருமணம் செய்திருக்கும் அஷ்வின் அவரை விட ஒரு வயது சிறியவர் என தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மாளவிகா பேசுகையில் “என்னை விட என் கணவர் வயதில் சிறியவர் என்பதில் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. வயது ஒரு முக்கிய விஷயம் இல்லை, எங்களுக்குள் எந்த அளவுக்கு புரிதல் இருக்கிறது என்பது தான் முக்கியம்” என்று கூறியுள்ளார்.

Share.