முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ப்ராஜெக்ட் K’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஆதிபுருஷ்’, நடிகர் பிரபாஸின் கேரியரில் 22-வது படமாம். இப்படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறாராம்.
இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானும், பிரபாஸுக்கு தம்பியாக பாலிவுட் நடிகர் சன்னி சிங்கும் நடித்துள்ளார்கள். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகுகிறது.
இதனை ‘டி-சீரிஸ்’ மற்றும் ‘ரெட்ரோபைல்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகுகிறது. சமீபத்தில், இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த டீசர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்த வண்ணமுள்ளனர்.
இதனால், இப்படக்குழுவினர் மீண்டும் VFX பணிகளுக்காக ரூ.100 கோடி செலவழிக்க திட்டமிட்டிருப்பதாகவும், வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகவிருந்த இப்படத்தை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்போவதாகவும் கூறப்பட்டது. தற்போது, இந்த படத்தை அடுத்த ஆண்டு (2023) ஜூன் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus