பிரபாஸ் – அமிதாப் பச்சன் சேர்ந்து நடிக்கும் சயின்ஸ்-ஃபிக்ஷன் படம்… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் நாக் அஷ்வின் இயக்கும் படம் நடிகர் பிரபாஸின் கேரியரில் 21-வது படமாம். இதனை ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகுகிறது. சமீபத்தில், இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தமானார். நடிகர் பிரபாஸ், நடிகை தீபிகா படுகோன் டூயட் பாடி ஆடப்போகும் முதல் படம் இதுதானாம். இதில் முக்கிய ரோலில் டாப் பாலிவுட் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு மிக்கி.ஜே.மேயர் இசையமைக்கிறார், டேனி சஞ்செஸ் லோபெஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் தயாராகும் இப்படத்தின் கதைக்களம் 2050-ஆம் ஆண்டு நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதாம். தற்போது, ‘ப்ராஜெக்ட் K’ என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இன்று (ஜூலை 24-ஆம் தேதி) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Prabhas (@actorprabhas)

Share.