முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சலார்’ படத்தை ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது. ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோ பிரபாஸுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
மேலும், மிக முக்கிய ரோலில் ஜெகபதி பாபு நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியான போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.
படத்தை அடுத்த ஆண்டு (2023) செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று லீக்காகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
The Most Violent #Prabhas in and as #Salaar
pic.twitter.com/RkPzAbJF2r
— ִֶָ (@charanvicky_) September 24, 2022