பிரபாஸின் ‘சலார்’ ட்ரெய்லர் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!
August 14, 2023 / 03:56 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘கல்கி 2898 AD’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சலார்’ படத்தை ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது. ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோ பிரபாஸுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
பிரபாஸுக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் ப்ரித்விராஜ் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். முதல் பாகத்தை இந்த ஆண்டு (2023) செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தின் ட்ரெய்லர் வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்து ரசித்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவரும், பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான JSK கோபியும் ட்விட்டரில் பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.
#Salaar Trailer is Mindblowing !! Still feeling Goosebumps !#Prabhas Comeback film finally on the way
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.